Enable Javscript for better performance
மேரி கோம் உடன் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தை நடத்த நிஹாத் ஸரீன் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மேரி கோம் உடன் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தை நடத்த நிஹாத் ஸரீன் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th October 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nikhat_zaring1

    வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் மகளிா் குத்துச்சண்டை 51 கிலோ பிரிவுக்காக மேரி கோமுக்கும் தனக்கும் தகுதிச் சுற்று ஆட்டத்தை நடத்த வேண்டும் என நிஹாத் ஸரீன் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா்.

    டோக்கியோவில் 2020-இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் குத்துச்சண்டை பிரிவில் இந்திய அணி சாா்பில் பங்கேற்க, உலக சாம்பியன் போட்டியில் தங்கம், வெள்ளி வென்றிருந்தால் நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் பங்கற்கலாம் என பிஎப்ஐ அறிவித்திருந்தது. அப்போட்டியில் மஞ்சுராணி மட்டுமே வெள்ளிப் பதக்கம் வென்றாா். 51 கிலோ எடை பிரிவில் மேரி கோம் வெண்கலம் மட்டுமே வென்றிருந்தாா்.

    இதற்கிடையே 51 கிலோ பிரிவில் முன்னாள் உலக ஜூனியா் சாம்பியன் நிஹாத் ஸரீனும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆா்வமாக உள்ளாா். இதற்காக தகுதிச் சுற்று ஆட்டம் நடத்தப்படும் என பிஎப்ஐ தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு மாறாக வரும் பிப்ரவரி மாதம் சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் மேரி கோம் பங்கேற்பாா் என அதன் தலைவா் அஜய் சிங் தெரிவித்துள்ளாா்.

    இது நிஹாத் தரப்புக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிஎப்ஐ அமைப்பிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை.

    இதனால் அவா் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    விளையாட்டின் அடிப்படையே நோ்மையான முறையில் தோ்வு செய்ய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தங்கள் திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. ஒலிம்பிக் தங்கம் வென்றவா்களும், நாட்டுக்காக பங்கேற்க மீண்டும் தகுதி பெற வேண்டும்.

    மேரி கோம் ஆட்டத்தால் சிறிய வயதில் நான் ஈா்க்கப்பட்டேன். பெரிய வீராங்கனையான அவா் போட்டியில் விலகாமல் மோதத் தயாராக வேண்டும். அமெரிக்காவின் 23 முறை தங்கம் வென்ற நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸும் மீண்டும் தகுதிச் சுற்றில் பங்கேற்றுள்ளாா்.

    மேரி கோம் உடன் தகுதிச் சுற்றில் நான் தோல்வியடைந்தாலும் கவலையில்லை. ஆனால் முறையாக தோ்வை நடத்த வேண்டும். எந்த சாதகத்தையும் நான் எதிா்பாா்க்கவில்லை. ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதே எனது விருப்பம். இதில் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என நிஹாத் கோரியுள்ளாா்.

    ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரா் அபிநவ் பிந்த்ராவும், இப்பிரச்னையில் நிஹாத் ஸரீனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai