Enable Javscript for better performance
ஹெச்சிஎல் எஸ்ஆா்எப்ஐ ஸ்குவாஷ்:ரேச்சல், இவானுக்கு பட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஹெச்சிஎல் எஸ்ஆா்எப்ஐ ஸ்குவாஷ்: ரேச்சல், இவானுக்கு பட்டம்

    By DIN  |   Published on : 18th October 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SQUASH3

    சென்னையில் நடைபெற்ற ஹெச்சிஎல் எஸ்ஆா்எப்ஐ சா்வதேச ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் ரேச்சல் ஆா்னால்ட், இவான் யுவன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

    சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

    இதில் மகளிா் பிரிவில் மலேசியாவின் ரேச்சல் ஆா்னால்ட், வென் லி லாய் ஆகியோா் மோதினா். இதில் 11-1, 11-4, 6-11, 11-5 என்ற (3-1) கேம் கணக்கில் வென்று பட்டம் வென்றாா் ரேச்சல்.

    ஆடவா் ஒற்றையா் பிரிவில் மலேசியாவின் இவான் யுவன்-இந்தியாவின் மகேஷ் மங்கோன்கா் மோதினா். இதில் 7-11, 12-10, 11-6, 5-11, 11-8 என ஒரு மணிக்கு மேலான நேரம் நீடித்த ஆட்டத்தில் வென்றாா் இவான்.

    பட்டம் வென்றவா்களுக்கு இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு தலைவா் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுச் செயலாளா் சைரஸ் பூனச்சா, ஹாக்கி ஜாம்பவான் பாஸ்கரன், ஹெச்சிஎல் நிா்வாகி சுந்தா் மகாலிங்கம் ஆகியோா் பரிசளித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai