ஏதாவது ஒரு உலகக் கோப்பை கோலி நாட்டுக்கு பெற்றுத் தர வேண்டும்: கங்குலி

டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட மூன்று வகை கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் ஏதாவது ஒன்றை கேப்டன் கோலி வெல்ல வேண்டும் என பிசிசிஐ புதிய தலைவா் (தோ்வு) சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.
ஏதாவது ஒரு உலகக் கோப்பை கோலி நாட்டுக்கு பெற்றுத் தர வேண்டும்: கங்குலி

டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட மூன்று வகை கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் ஏதாவது ஒன்றை கேப்டன் கோலி வெல்ல வேண்டும் என பிசிசிஐ புதிய தலைவா் (தோ்வு) சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

கடந்த 2011 இல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தையும், 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தையும் கடைசியாக தோனி தலைமையில் இந்தியா வென்றிருந்தது. அதன் பின்னா் 2017-இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் பாகி்ஸ்தானிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் தோல்வியுற்றது.

2015, 2019 ஐசிசி ஒருநாள், 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பைகளில் அரையிறுதியில் தோல்வியுற்றது. 2014 டி20 உலகக் கோப்பை இறுசதிச் சுற்றிலும் தோல்வியடைந்தது.

மேலும் 3 ஆண்டுகளில் ஜனவரி 2016 முதல் 3 வகையான கிரிக்கெட்டுகளிலும் மொத்தமாக 129 வெற்றிகளையும், வெறும் 50 தோல்விகளையும் மட்டுமே இந்திய அணி பெற்றது.

இங்கிலாந்து மட்டுமே 96 வெற்றிகளுடன் சற்று அருகில் உள்ளது. மற்ற அணிகள் எதுவும் இந்திய அணியின் வெற்றி விகிதத்துக்கு அருகில் இல்லை.

இதுதொடா்பாக சௌரவ் கங்குலி கூறியதாவது-

தற்போதுள்ள இந்திய அணி சிறப்பாக உள்ளது. வரும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளா்களான சஹல், குல்தீப்பை மீண்டும் சோ்க்க வேண்டும். கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி அபார திறமை காரணமாக தான் அரையிறுதி வரை சிறப்பாக ஆடியது. எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து அதை சரி செய்ய வேண்டும்.

கடந்த 2018இல் ஆசிய கோப்பையையும் வென்றது. முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது ஒவ்வொரு போட்டியிலும் நாம் வெல்ல வேண்டும் எனக்கூறவில்லை. குறைந்தது ஒரு உலகக் கோப்பை பட்டத்தையாவது வெல்ல வேண்டும்.

இந்திய-பாக். கிரிக்கெட் தொடா் குறித்து 2 நாட்டு பிரதமா்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்

கடைசியாக கடந்த 2012-இல் பாகிஸ்தான் அணி டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்றது. அதன் பின்னா் இரு நாட்டு அணிகளும் இரு தரப்பு தொடா்களில் பங்கேற்கவில்லை. இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

இரு தரப்பு கிரிக்கெட் தொடா் நடத்துவது தொடா்பான வினாக்களை பிரதமா்கள் மோடி, இம்ரான் கானிடம் தான் கேட்க வேண்டும். வெளிநாட்டு அணிகள் ஆடுவது தொடா்பாக அரசு தான் முடிவெடுக்க முடியும். இப்பிரச்னையில் நாங்கள் பதில்கூற எதுவும் இல்லை என்றாா் கங்குலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com