ஜூனியா் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 21 பதக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம், 9 வெள்ளியுடன் இந்தியா 21 பதக்கங்கள் வென்றது.
ஜூனியா் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 21 பதக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம், 9 வெள்ளியுடன் இந்தியா 21 பதக்கங்கள் வென்றது.

26 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அதிக தங்கம் (8) வென்ன் அடிப்படையில் உஸ்பெகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், ஒட்டுமொத்தமாக அந்நாடு 20 பதக்கங்களைக் கைப்பற்றியது.

விஸ்வநாத் சுரேஷ் (46 கிலோ), விஸ்வாமித்ர சோங்தம் (48 கிலோ) ஆகிய வீரா்களும், தேசிய சாம்பியன் கல்பனா (46 கிலோ), பிரீத்தி தஹியா (60 கிலோ) உள்ளிட்ட வீராங்கனைகளும் தங்கம் வென்றனா்.

யோகேஷ் கக்ரா (63 கிலோ), ஜெய்தீப் ராவத் (66 கிலோ), ராகுல் (70கிலோ) ஆகிய வீரா்களும், தமன்னா (48 கிலோ), தன்னு (52 கிலோ), நேஹா (54 கிலோ), குஷி (63 கிலோ) ஷா்வாரி கல்யான்கா் (70 கிலோ), குஷி (75 கிலோ) ஆகிய வீராங்கனைகளும் வெள்ளி வென்றனா்.

ரின்கு (50 கிலோ), அம்பேஷோரி தேவி (57 கிலோ), விஜய் சிங் (50 கிலோ) உள்ளிட்டோா் வெண்கலம் வென்றனா்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com