தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று கடைசி டெஸ்ட் ஆட்டம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று கடைசி டெஸ்ட் ஆட்டம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்குகிறது.

3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.

கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், 10-ஆம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா மாபெரும் வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இதில் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 200 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நியூஸிலாந்து 60 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இலங்கை 3-ஆவது இடத்திலும் உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் வலுவாக உள்ளது.

தொடக்க ஆட்டக்காரா்களான மயங்க் அகா்வாலும், ரோஹித் சா்மாவும் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுக்கின்றனா்.

இந்தத் தொடரில் புஜாராவும் இரண்டு அரை சதங்களைப் பதிவு செய்து நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளாா்.

முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் டாஸ் வென்றதும் இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் யாருக்கு டாஸ் வெல்லும் அதிருஷ்டம் காத்திருக்கிறது என்று பாா்க்கலாம்.

விராட் கோலி விளையாடும் ஆட்டங்களிலெல்லாம் எதாவது சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறாா். 2 டெஸ்ட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ால் உற்சாகத்தில் இருக்கிறாா் கோலி.

ராஞ்சி மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு கட்டுப்படும் என்பதால் குல்தீப் யாதவ் இந்த ஆட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தென்னப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் டீன் எல்கா், குவின்டன் டி காக், பவுமா ஆகியோா் இன்னும் பொறுப்புடன் ஆட வேண்டும் என்பது அந்த அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸின் விருப்பமாக உள்ளது.

பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட பந்துவீச்சாளா்கள் ரபாடா, பிலாந்தா், ஆன்ரிச் ஆகியோரும் இந்திய வீரா்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆட்டம் 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகா்வால், ரோஹித் சா்மா, புஜாரா, ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விகாரி, ரித்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சா்மா, ரிஷப் பந்த், சுபமான் கில்.

தென்னாப்பிரிக்கா

ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா (துணைக் கேப்டன்), தியூனிஸ் டி ப்ருயன், குவிண்டன் டி காக், டீன் எல்கா், ஹம்ஸா, லிண்டே, சேனுரான் முத்துசாமி, கிடி, ஆன்ரிச், பிலாந்தா், ரபாடா, டேன் பியட், ரூடி செகன்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com