பிராட்மேனையே மிஞ்சும் ரோஹித் சர்மாவின் சராசரி!

உள்ளூரில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
பிராட்மேனையே மிஞ்சும் ரோஹித் சர்மாவின் சராசரி!


உள்ளூரில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா இரட்டைச் சதம் அடித்து 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

உள்ளூரில் விளையாடிய டெஸ்ட் ஆட்டங்களில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 18 இன்னிங்ஸில் 99.84 ஆக உள்ளது. இவர் இந்த 18 இன்னிங்ஸில் மொத்தம் 1298 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், உள்ளூரில் விளையாடிய டெஸ்ட் ஆட்டங்களில் (குறைந்தபட்சம் 10 ஆட்டங்கள்) அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

முன்னதாக, டான் பிராட்மேன் ஆஸ்திரேலிய மண்ணில் 50 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி பேட்டிங் சராசரியை 98.22 ஆக வைத்திருந்ததே சாதனையாக இருந்தது. அவர் இந்த 50 இன்னிங்ஸில் மொத்தம் 4322 ரன்கள் எடுத்துள்ளார். பிராடன்மேனின் சாதனையையே மிஞ்சும் அளவுக்கு ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்ததன்மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக்குக்குப் பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com