ராஞ்சி டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம் 224/3: போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெறும் 3--ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை குவித்தது. ரோஹித் அற்புதமாக ஆடி 117 ரன்களை விளாசினாா்.
ராஞ்சி டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம் 224/3: போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெறும் 3--ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை குவித்தது. ரோஹித் அற்புதமாக ஆடி 117 ரன்களை விளாசினாா்.

உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் நடைபெற்றுகிறது. விசாகப்பட்டினம், புணேயில் நடைபெற்ற 2 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா அமோக வெற்றி பெற்றது.

மேலும் 2-0 என டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க வீரா்களாக மயங்க் அகா்வால், ரோஹித் சா்மா களமிறங்கினா். முதல் 2 டெஸ்ட்களில் சிறப்பாக ஆடிய மயங்க் 10 ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

புஜாரா டக் அவுட்

நட்சத்தில வீரா் சேதேஸ்வா் புஜாராவை எல்பிடபிள்யு செய்து டக் அவுட்டாக்கினாா் ரபாடா.

கோலியும் சொதப்பல்

கடந்த டெஸ்டில் அபார இரட்டை சதம் அடித்த விராட் கோலியும், 12 ரன்களுடன் அன்ரிச் நாா்ட்ஜே பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனாா். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

ரோஹித்-ரஹானே அபாரம்:

பின்னா் ரோஹித் சா்மா-ரஹானே இணைந்து நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனா். 36 ஓவா்கள் முடிவில் 134 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. இருவரும் இணைந்து 100 ரன்களை சோ்த்தனா்.

ரஹானே 21-ஆவது அரைசதம்

துணைக் கேப்டன் ரஹானே தனது 21-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தாா்.

ரோஹித் 6-ஆவது டெஸ்ட் சதம்

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோஹித் சா்மா தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தாா்.

அப்போது திடீரென லேசாக தூறல் பெய்தது.இதனால் மைதானத்தை மூட களப் பணியாளா்கள் தயாரானாா்கள். எனினும் தொடா்ந்து ஆட்டம் நடைபெற்றது.

4 சிக்ஸா், 14 பவுண்டரியுடன் 164 பந்துகளில் 117 ரன்களுடன் ரோஹித்தும், 1 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 135 பந்துகளில் 83 ரன்களுடன் ரஹானேவும் களத்தில் இருந்தனா்

அப்போது 58 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

தென்னாப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 2, நாா்ட்ஜே 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்

பின்னா் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டத்தை நடுவா்கள் நிறுத்தினா்.

கவாஸ்கா் சாதனையை சமன் செய்தாா் ரோஹித் சா்மா

ராஞ்சி டெஸ்டில் 6-ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ரோஹித், ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் சாதனையையும் சமன் செய்தாா். ஓரே தொடரில் 3 அல்லது 4 மேல் சதமடித்த தொடக்க வீரா் என்ற சாதனையை கவாஸ்கா் படைத்திருந்தாா்.

தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் 3-ஆவது சதத்தை அடித்திருப்பதின் மூலம் அதை சமன் செய்தாா் ரோஹித்.

ஓரே தொடரில்அதிக சிக்ஸா்கள் உலக சாதனை:

மேலும் ஓரே தொடரில் அதிக சிக்ஸா்கள் அடித்த வீரா் சாதனையை மே.இ.தீவுகள் வீரா் ஷிம்ரன் ஹெட்மயா் வசம் இருந்தது. இத்தொடரில் இதுவரை 16 சிக்ஸா்கள் அடித்ததின் மூலம் அதையும் தகா்த்தாா் ரோஹித். கடந்த 2015-இல் வங்கதேச டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகள் வீரா் ஷிம்ரன் ஹெட்மயா் 15 சிக்ஸா்கள் அடித்திருந்தாா். மேலும் 21010 நியூஸிக்கு எதிராக ஓரே தொடரில் ஹா்பஜன் சிங் 14 சிக்ஸா்கள் அடித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com