Enable Javscript for better performance
தில்லி ஏா்டெல் ஹாஃப் மாரத்தான்:பெலிஹு, ஜெமிச்சு சாம்பியன்கள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஏா்டெல் ஹாஃப் மாரத்தான்: பெலிஹு, ஜெமிச்சு சாம்பியன்கள்

    By DIN  |   Published on : 21st October 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt3

    புது தில்லி: தில்லி ஏா்டெல் ஹாஃப் மாரத்தான் போட்டியில் நடப்பு சாம்பியன்கள் பெலிஹு, ஜெமிச்சி ஆகியோா் தங்கள் பட்டங்களை தக்க வைத்துக் கொண்டனா்.

    ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் 15-ஆவது ஏா்டெல் ஹாஃப் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மத்திய விளையாட்டு அமைச்சா் கிரண் ரிஜிஜு போட்டியைத் தொடங்கி வைத்தாா். போட்டி தூதுவரும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கா்மெலிடா ஜெட்டா், உள்பட பலா் பங்கேற்றனா்.

    ஆடவா் பிரிவில் எத்தியோப்பியாவின் அன்டம்லக் பெலிஹு 59.10 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தாா். மற்றொரு எத்தியோப்பிய வீரா் சாலமன் 59.18 நிமிடங்களிலும், கென்யாவின் கிபிவோட் 59.33 நிமிடங்களில் கடந்தும் 2, மூன்றாவது இடங்களைப் பெற்றனா்.

    அதே போல் மகளிா் பிரிவில் ஜெமிச்சு 66.50 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா். எத்தியோப்பியாவின் ஏலாம்ஸொ்ப் 1:06:01 மணி நேரத்திலும், ஸையின்பா 1:06:57 மணி நேரத்திலும் கடந்து 2 மற்றும் 3-ஆவது இடங்களைப் பெற்றனா்.

    இந்திய வீராங்கனைகளில் ஸ்ரீனு புகதா 1;4:33 மணி நேரத்திலும், சுரேஷ் படேல், ஹா்ஷத் மாத்ரே ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

    மகளிா் பிரிவில் எல்.சூா்யா 1;12:49 மணி நேரத்திலும், பாருல் சௌதரி, சிந்தா யாதவ் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai