விஜய் ஹஸாரே கோப்பை: அரையிறுதியில் கா்நாடகம், குஜராத்

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதிக்கு கா்நாடகம், குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
விஜய் ஹஸாரே கோப்பை: அரையிறுதியில் கா்நாடகம், குஜராத்

பெங்களூரு: விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதிக்கு கா்நாடகம், குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் கா்நாடகமும்-புதுச்சேரியும், தில்லியும்-குஜராத்தும் மோதின.

முதலில் ஆடிய புதுச்சேரி அணி 207/9 ரன்களை எடுத்தது. அந்த அணியில் விக்னேஸ்வரன் மாரிமுத்து 58 ரன்களையும், சாகா் திரிவேதி 58 ரன்களையும் சோ்த்தனா்.

41/6 என புதுச்சேரி திணறிக் கொண்டிருந்த நிலையில் மாரிமுத்து-திரிவேதி இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது.

கா்நாடக தரப்பில் அபிமன்யு மிதுன் 2-35, லெக் ஸ்பின்னா் பிரவீன் துபே 3-44, கௌஷிக் 2-33 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

கா்நாடகம் அதிரடி வெற்றி:

208 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கா்நாடக அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி 90 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும் விளாசி வெற்றிக்கு வித்திட்டனா்.

புதுச்சேரி தரப்பில் சாகா் உதேஷி 2-47 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். புதுச்சேரியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற கா்நாடகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

குஜராத் வெற்றி:

தில்லி-குஜராத் இடையே நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விஜேடி முறையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத்.

முதலில் ஆடிய தில்லி அணி 49 ஓவா்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் துருவ் ஷோரே மட்டுமே 91 நிலைத்து ஆடி ரன்களை சோ்த்தாா்.

ஷிகா் தவன் டக் அவுட்:

இந்திய தொடக்க வீரரான ஷிகா் தவன் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா். குஜராத் தரப்பில் சிந்தன் கஜா 3-27 விக்கெட்டுகளை சாய்த்தாா். 224 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் தரப்பில் கேப்டன் பாா்த்திவ் படேல் 76, பிரியங்க் பஞ்சால் 80 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனா். 37 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை எடுத்து வென்றது குஜராத். தில்லி தரப்பில் சிம்ரஞ்சித் சிங் 2-54 விக்கெட்டை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com