தேசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிச் சுற்றில் தமிழகத்தின் பூஜா, தர்ஷில்

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு வயது பிரிவுகளில் உயர்நிலை வீரர்கள் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
தேசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிச் சுற்றில் தமிழகத்தின் பூஜா, தர்ஷில்


சென்னையில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு வயது பிரிவுகளில் உயர்நிலை வீரர்கள் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சிறுவர் 11, 15, சிறுமியர் 13, 15 வயது பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் இந்நிலை ஏற்பட்டது.
மகளிர் 15 வயது பிரிவில் உள்ளூர் வீராங்கனை பூஜா ஆர்த்தி 11-6, 11-6, 4-11, 7-11, 11-4 என்ற கேம் கணக்கில் முதல்நிலை வீராங்கனை காவ்யா பன்சாலை (மகாராஷ்டிரா) கடினமாக போராடி வென்றார்.
 13 வயது பிரிவில் தரவரிசையில் இல்லாத தியா யாதவ் (மகாராஷ்டிரம்) 12-10, 11-4, 11-5 என்ற கேம் கணக்கில் உத்தரகாண்டின் 2-ஆம் நிலை வீராங்கனை உன்னதி திரிபாதியை வீழ்த்தினார்.
சிறுவர் 11 வயது பிரிவில் தில்லியின் ஆர்யவீர் தேவன் 11-1, 12-10, 11-3 என முதல்நிலை வீரர் அகஸ்தியா பன்சாலை வீழ்த்தினார்.
தமிழகத்தின் தர்ஷிலும் 8-11, 11-6, 11-1, 11-3 என்ற கேம் கணக்கில் ராஜஸ்தானின் சுபாஷ் செளதரியை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
15 வயது பிரிவில் மகாராஷ்டிரத்தின் யுவராஜ் 11-9, 12-10, 11-4 என சக வீரர் பார்த் அம்பானியையும், தில்லியின் செளர்ய பவா 11-8, 4-11, 9-11, 11-6, 11-6 என ம.பி.யின் கிருஷ்ணாவையும் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com