விஜய் ஹஸாரே கோப்பை: அரையிறுதியில் தமிழகம்: மழையால் வெளியேறியது நடப்பு சாம்பியன் மும்பை

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதே நேரம் நடப்பு சாம்பியன் மும்பை, மழையால் வெளியேற்றப்பட்டது.
விஜய் ஹஸாரே கோப்பை: அரையிறுதியில் தமிழகம்: மழையால் வெளியேறியது நடப்பு சாம்பியன் மும்பை


விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதே நேரம் நடப்பு சாம்பியன் மும்பை, மழையால் வெளியேற்றப்பட்டது.
பெங்களூரை அடுத்த ஆலுரில் திங்கள்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 
தமிழகம்-பஞ்சாப் இடையிலான ஆட்டம் நடைபெற்ற போது, மழை குறுக்கிட்டதால் 50 ஓவர்களில் இருந்து 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய தமிழகம் 39 ஓவர்களில் 174/6 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்கள் முரளி விஜய் 22, அபிநவ் முகந்த் 17 ஆகியோர் சோபிக்கவில்லை. பின்னர் வந்த பாபா அபராஜித் நிதானமாக ஆடி 76 பந்துகளில் 56 ரன்களை சேர்த்தார். ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 13 ரன்களுக்கும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும் அவுட்டான நிலையில் மீண்டும் சிக்கலுக்கு தள்ளப்பட்டது தமிழகம்.
பின்னர் வந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 35 பந்துகளில் 39 ரன்களை சேர்த்ததால் கெளரவமான ஸ்கோரை எட்டியது.
175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் வர்மா 6, அன்மோல்ப்ரீத் சிங் 9 ரன்களுடன் வெளியேறினர்.
மழையால் ஆட்டம் நிறுத்தம்: அப்போது பலத்த மழை பெய்ததால் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
லீக் சுற்றுகளில் தமிழகம் 9 வெற்றிகளும், பஞ்சாப் 5 வெற்றிகளையும் பெற்றிருந்தன. இதன் அடிப்படையில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குஜராத் அணியுடன் புதன்கிழமை அரையிறுதியில் மோதுகிறது தமிழகம்.
நடப்பு சாம்பியன் மும்பை வெளியேற்றம்: சத்தீஸ்கர்-மும்பை அணிகள் இடையே நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 45.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை குவித்தது சத்தீஸ்கர். ஹர்ப்ரீத் சிங் 83, அமன்தீப் காரே 59 ரன்களை சேர்த்தனர். மும்பை வீரர் தவல் குல்கர்னி 2-9 விக்கெட்டை சாய்த்தார்.
பின்னர் மழை பெய்ததால் ஓவர்கள் 39 ஆக குறைக்கப்பட்டது. மும்பையின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தலா 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 60 ரன்களை எடுத்திருந்தார். ஆதித்ய டரே 31 ரன்களுடன் களத்தில் இருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.
11.3 ஓவர்களில் 95 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது மும்பை.
லீக் சுற்றுகளில் 8 ஆட்டங்களில் சத்தீஸ்கர் 5 ஆட்டங்களிலும், மும்பை 4-இல் மட்டுமே வென்றன. இதனால் சத்தீஸ்கர் அரையிறுதிக்கு முன்னேறியது. புதன்கிழமை கர்நாடகத்துடன் மோதுகிறது சத்தீஸ்கர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com