வங்கதேசத்துடனான டி20 தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்துடனான டி20 தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?


வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நாளை (புதன்கிழமை) தேர்வு செய்கிறது. இதில், இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான இறுதி முடிவு விராட் கோலியிடமே விடப்பட்டுள்ளது.

இதில், ஆல்-ரௌண்டர் ஹார்திக் பாண்டியா சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பதால், அவருக்குப் பதில் ஷிவம் டூபே இடம்பெறுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்காக இரட்டைச் சதம் அடித்த சஞ்சு சாம்சன் பெயரும் இந்த தொடரில் இடம் பெறுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ-க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒரே அணியில் இடம்பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக ஐபிஎல் விளையாடியுள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் ரிஷப் பந்த் மிகக் குறைந்த அளவிலேயே சாதித்திருந்தாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதேசமயம், சஞ்சு சாம்சன் அணியை மாற்றக்கூடிய திறனுடையவர்.

டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அணி நிர்வாகம் மற்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியத் தேவை உள்ளது. தோனி தவிர்த்தே சிந்திக்க வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்" என்றனர். 

சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ராகுல் சஹார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரே மீண்டும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் தீபக் சாஹர், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கே வாய்ப்பளிக்கபடலாம். விஜய் ஹசாரே தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com