விஜய் ஹஸாரே கோப்பை: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் புதன்கிழமை நடைபெறுகின்றன.


விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் புதன்கிழமை நடைபெறுகின்றன.
கர்நாடகம்-சத்தீஸ்கர் அணிகளும், தமிழகம்-குஜராத் அணிகளும் மோதுகின்றன. எனினும் மழை நிலவரத்தை பொறுத்தே ஆட்டங்கள் நடைபெறும்.
காலிறுதியில் புதுவையை வென்று கர்நாடகமும், சத்தீஸ்கர் மழை உதவியுடன் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. தமிழகம் லீக் சுற்றுகளில் அதிக வெற்றிகளை பெற்றதன் அடிப்படையில் பஞ்சாபை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அதே நேரம் தில்லியை வீழ்த்தி குஜராத் முன்னேறியது.
தமிழக அணியில் அனுபவம் நிறைந்த தினேஷ் கார்த்திக், முரளி விஜய், விஜய் சங்கர், அபிநவ் முகுந்த், அபராஜித், ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சாளர்களில் நடராஜன், விக்னேஷ், சாய்கிஷோர், முருகன் அஸ்வின் பலம் சேர்க்கின்றனர். 
குஜராத் அணியில் பேட்டிங்கில் பார்த்திவ் பட்டேல், பிரியங்க் பஞ்சால் ஆகியோரும், பந்துவீச்சில் பியுஷ் சாவ்லா, ரஷ் கலாரியா சவாலை தருவர். 
மழை இல்லாமல் முழு ஆட்டமும் நடைபெறும் என தமிழக பயிற்சியாளர் டி.வாசு நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com