முகப்பு விளையாட்டு செய்திகள்
ஐசிசி தரவரிசை: மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் முதல் 10 இடங்களில் ரோஹித்ஐசிசி தரவரிசை: மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் முதல் 10 இடங்களில் ரோஹித்
By DIN | Published On : 24th October 2019 12:58 AM | Last Updated : 24th October 2019 12:58 AM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ரோஹித் சர்மா, டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் வந்துள்ளார்.
இதன்மூலம், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் முதல் 10 இடங்களில் வந்த 3-ஆவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித். டெஸ்ட் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடம் பிடித்துள்ளார் ரோஹித்.
937 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முதலிடத்திலும், 926 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் கோலி 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இந்திய வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ஆவது இடத்தில் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் பும்ரா 4-ஆவது இடத்துக்கும், அஸ்வின் 10-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டரில் இந்திய வீரர் ஜடேஜா 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் மே.இ.தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் உள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் கோலி முதலிடத்திலும், ரோஹித் 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
பந்துவீச்சாளர்களில் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்.
டி-20 தரவரிசையில் ரோஹித், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் 7-ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். லோகேஷ் ராகுல், கோலி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.