வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே தேர்வு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே தேர்வு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. 

டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். டி20 தொடரில் விராட் கோலி பங்கு பெறாததால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரிலும் தோனி இடம்பெறவில்லை. 

டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிருனாள் பாண்டியா, சஹால், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் டுபே, ஷர்துல் தாக்குர். 

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா,  மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com