இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப திட்டம்: யு-23 அணி வீரர்களுடன் பயிற்சி பெறவுள்ள தோனி!

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பத் தயாராகி வருகிறார் தோனி. அதற்கான முன்னேற்பாடாக ஜார்கண்ட் யு-23 அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். 
இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப திட்டம்: யு-23 அணி வீரர்களுடன் பயிற்சி பெறவுள்ள தோனி!

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பத் தயாராகி வருகிறார் தோனி. அதற்கான முன்னேற்பாடாக ஜார்கண்ட் யு-23 அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இரு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் தோனி. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய விடுமுறையை நவம்பர் மாதம் வரை தோனி நீட்டித்துள்ளார். இதனால் விஜய் ஹசாரே கோப்பை, வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளில் தோனி பங்கேற்கப் போவதில்லை என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதனால் இந்தத் தொடரில்தான் அடுத்ததாக தோனி பங்கேற்பார் எனத் தெரிகிறது. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். தற்போது அவர் ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு டிசம்பரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார். 

இந்நிலையில் கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் தொடர்ந்து, இந்திய அணியில் விளையாடுவதற்காகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறார் தோனி. இந்திய அணிக்கு மீண்டும் திரும்பவுள்ள தோனி, தற்போது ஜார்கண்டில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பாட்மிண்டன், டென்னிஸ், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபாடு காண்பித்து வருகிறார். இதையடுத்து, ஜார்கண்ட் யு-23 அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். முதலில், ஜார்கண்ட் சீனியர் அணி வீரர்களுடன் பயிற்சி பெறவே தோனி விரும்பியுள்ளார். ஆனால் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கோப்பைக்காக ஜார்கண்ட் அணி சூரத்துக்குச் செல்லவுள்ளது. இதனால் ஜார்கண்ட் யு-23 வீரர்களுடன் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளார் தோனி. அக்டோபர் 31 முதல் யு-23 தேசிய அளவிலான போட்டி நடைபெறவுள்ளதால் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள் யு-23 ஜார்கண்ட் வீரர்கள்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் தோனி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தவை. தோனியை இந்திய அணியில் மீண்டும் காணலாம், வெகுவிரைவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com