வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை: ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு!

2 வருடங்களுக்கு முன், சூதாட்டக்காரர் ஒருவர் தன்னை அணுகியது குறித்து ஷகிப் அல் ஹசன் ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் தகவல் தெரிவிக்காத குற்றத்துக்காக அவருக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


2 வருடங்களுக்கு முன், சூதாட்டக்காரர் ஒருவர் தன்னை அணுகியது குறித்து ஷகிப் அல் ஹசன் ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் தகவல் தெரிவிக்காத குற்றத்துக்காக அவருக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டனாக ஷகிப் அல் ஹசன் உள்ளார். இவர் வங்கதேச அணியின் தவிர்க்க முடியாத அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். இந்நிலையில், இவரை சூதாட்டத்தில் ஈடுபடக்கோரி சூதாட்டக்காரர் ஒருவர் கடந்தாண்டு இவரிடம் முறையிட்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதி 2.4.4-இன் படி சூதாட்டத்தில் ஈடுபடக்கோரி ஏதேனும் அழைப்பு வந்தாலோ அல்லது யாரேனும் அணுகினாலோ அது குறித்த முழு தகவல்களை ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், ஷகிப் அல் ஹசன் அதைச் செய்ய தவறியுள்ளார்.

இந்த குற்றத்துக்காக, ஷகிப் அல் ஹசன் மீது ஐசிசி 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அவை,
 

  • 2018 ஜனவரியில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும்/அல்லது 2018 ஐபிஎல் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபடக்கோரி வந்த அழைப்பு/அணுகுமுறை குறித்த முழு தகவலை ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்க தவறியது.
     
  • 2018 ஜனவரியில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபடக்கோரி இரண்டாவது முறையாக அணுகியது குறித்த முழு தகவலை ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்க தவறியது. 
     
  • 2018 ஏப்ரல் 26-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையிலான ஐபிஎல் ஆட்டம் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபடக்கோரி வந்த அழைப்பு/அணுகுமுறை குறித்த முழு தகவலை ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்க தவறியது.
     

ஆனால், இவ்விவகாரத்தை ஊழல் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை வரை கொண்டு செல்லாமல் ஷகிப் அல் ஹசன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, தண்டனையை ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஷகிப்புக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com