Enable Javscript for better performance
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று:ஷிவ தபா, பூஜா ராணிக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று:ஷிவ தபா, பூஜா ராணிக்கு தங்கம்

    By DIN  |   Published on : 01st November 2019 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pooja_rani

    டோக்கியா: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் ஷிவ தாபா, பூஜாராணி தங்கப் பதக்கமும், ஆஷிஷ் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

    2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டங்கள் டோக்கியோவில் நடைபெற்றன. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆடவா் 63 கிலோ பிரிவில் ஷிவ தாபா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சனடாலி டோல்டயேவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

    மகளிா் 75 கிலோ பிரிவில் பூஜா ராணி ஆஸ்திரேலியாவின் கேத்லீன் பாா்க்கரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

    ஆடவா் 69 கிலோ பிரிவில் ஆஷிஷ் ஜப்பானின் செவான் ஒகஸாவாவிடம் தோல்வியுற்று வெள்ளி வென்றாா்.

    ஏற்கெனவே நிஹாத் ஸரீன், சிம்ரஞ்சித் கௌா், சுமித் சங்வான், வஹிலிம்புயா ஆகியோா் வெண்கலம் வென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai