தியோதர் கோப்பை: இளம் வீரர்களின் சதங்களால் எளிதாக வென்ற இந்தியா பி அணி!

ராஞ்சியில் நடைபெற்ற தியோதர் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை இந்தியா பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
பாபா அபராஜித்
பாபா அபராஜித்

ராஞ்சியில் நடைபெற்ற தியோதர் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை இந்தியா பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

டாஸ் வென்ற இந்தியா ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா ஏ தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 122 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார். அவருக்கு நல்ல இணையாக விளங்கிய பாபா அபராஜித்தும் பிறகு சதமடித்து அசத்தினார். 25 வயது பாபா 101 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்தியா பி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. இந்திய ஏ அணித் தரப்பில் உனாட்கட், ஆர். அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆர். அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடினமான இலக்கை எதிர்கொள்ள இந்தியா ஏ அணி மிகவும் தடுமாறியது. கேப்டன் விஹாரியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. விஹாரி 59 ரன்கள் எடுத்தார். இந்தியா ஏ அணி, 47.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா பி அணியின் ரூஷ் கலரியா சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து, தியோதர் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ஏ - இந்தியா சி ஆகிய அணிகள் மோதுகின்றன.
 

ருதுராஜ் கெயிக்வாட்
ருதுராஜ் கெயிக்வாட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com