இத்தனை பிரபலங்களுக்கும் அழைப்பா.. வியக்க வைக்கும் பகலிரவு டெஸ்டுக்கான பலே திட்டம்!

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் என்பதால் இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருநாட்டுப் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் பங்கேற்பு குறித்து தகவல் எதுவும் இல்லை.

இதுதவிர மேரி கோம், பிவி சிந்து, சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இன்று ஈடன் காடர்ன்ஸ் மைதானத்தில் பேட்டியளிக்கையில்,

"இதை அற்புதமான நிகழ்ச்சியாக மாற்றவுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 3-4 நாட்களில் நிகழ்ச்சி நிரல் குறித்த முழு பட்டியலையும் என்னால் கொடுக்க முடியும். பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2000-ஆம் ஆண்டில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். சச்சினை பங்கேற்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறேன். மற்ற அனைவரும் பங்கேற்பார்கள்.

மேலும், இந்த ஆண்டில் சாதனை புரிந்த மேரி கோம், பி.வி. சிந்து ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளார்கள்" என்றார்.

இந்தியா, வங்கதேசம் அணிகள் முதன்முதலாக 2000-வது ஆண்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதின. இந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களைத்தான் கங்குலி கௌரவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் நவம்பர் 22-26 வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com