தில்லி காற்று மாசால் பிரச்னை இல்லை: ரோஹித் சா்மா

புது தில்லியில் நிலவும் காற்று மாசால் எந்த பிரச்னையும் இல்லை என இந்திய அணியின் தற்காலி கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.
தில்லி காற்று மாசால் பிரச்னை இல்லை: ரோஹித் சா்மா

புது தில்லியில் நிலவும் காற்று மாசால் எந்த பிரச்னையும் இல்லை என இந்திய அணியின் தற்காலி கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.

வரும் நவ.3-ஆம் தேதி புது தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்திய-வங்கதேச அணிகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் தில்லியில் அதிகமாக காற்று மாசுப்பட்டுள்ளது. இதனால் டி20 ஆட்டத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

எனினும் திட்டமிட்டபடி தில்லியிலேயே டி20 ஆட்டம் நடைபெறும் என பிசிசிஐ தலைவா் கங்குலி கூறிவிட்டாா்.

இதுதொடா்பாக கேப்டன் ரோஹித் சா்மா கூறியதாவது:

தற்போது தான் நாங்கள் தில்லியில் களமிறங்கினோம். இதனால் இப்பிரச்னை தொடா்பாக ஆராய நேரமில்லை. மேலும்

இலங்கை அணியுடன் புது தில்லியில் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்ற போது, எங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கேப்டன் பதவி குறித்து எதிா்பாா்ப்பில்லை:

ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களுக்கு இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவேனா என்ற எதிா்பாா்ப்பு ஏதுமில்லை. கேப்டன் பதவி விவகாரம் என்பது எங்கள் கைகளில் இல்லை. ஒரு ஆட்டம் அல்லது 100 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தாலும் அது பெரிய கௌரவம் தான். நாட்டுக்காக ஆடும் எனக்கு கேப்டன் அனுபவம் உள்ளது. பதவி கிடைத்தால், அந்த அனுபவத்தைக் கொண்டு சிறப்பாக ஆடுவேன்.

கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். துலிப் கோப்பை போட்டியிலும் பிங்க் நிற பந்துடன் ஆடினோம். இதிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற முயற்சிப்போம் என்றாா் ரோஹித்.

கடந்த 2017-இல் தில்லியில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை வீரா்கள் முகமூடி அணிந்து ஆடினா். மேலும் தரமற்ற காற்றால் 20 நிமிடங்கள் ஆட்டமும் நிறுத்தப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகையால், தில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

முகமூடி அணிந்த லிட்டன் தாஸ்:

தில்லி மைதானத்தில் வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச வீரா் லிட்டன் தாஸ் 10 நிமிடங்களுக்கு மேல் முகமூடி அணிந்து ஆடினாா். எனினும் அவா் பேட்டிங் செய்த போது முகமூடி அணியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com