துளிகள்...

கொல்கத்தாவில் வரும் நவ. 22ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய-வங்கதேச பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் போது, ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கா், செஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் இதில் பங்கேற்க ஒப்புதல் தந்துள்ளாா். பிரதமா் மோடி, முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோருக்கும் அழைப்பு தரப்பட்டுள்ளது என கங்குலி தெரிவித்துள்ளாா்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிக்கும் காலம் வரை, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இளைஞா்கள் மேம்பாட்டுக்கான திட்டத்தில் அவரும் பங்கேற்பாா் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. திராவிட், பராஸ், பரத் அருண் ஆகியோருடன் சாஸ்திரியும் இணைந்து செயல்படுவாா்.

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோா் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிா் 53 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

ஜொ்மனியின் சாா்பருக்கன் நகரில் நடைபெற்று வரும் சாா்லோலக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரா்கள் லக்ஷயா சென், மிதுன் மஞ்சுநாத், ராகுல் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

மனதளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளாா் ஆஸி. அதிரடி வீரா் கிளென் மேக்ஸ்வெல்,

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையை விளம்பரப்படுத்தும் வகையில் விளையாட்டு தூதுவராக உலக சாம்பியன் மேரி கோமை சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தோ்வு செய்துள்ளது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் தியோதா் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய பி அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது. பி அணி 306/6 ரன்களை எடுத்தது. ஏ அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com