டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்! பும்ராவுக்கு 3-வது இடம்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்! பும்ராவுக்கு 3-வது இடம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங் பிரிவில், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் கோலி. இது அவருக்குப் பின்னடைவைத் தந்துவிட்டது. ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்டில் விளையாடாதபோதும் ஆஸி.யின் ஸ்டீவ் ஸ்மித், கோலியைப் பின்னுக்குத் தள்ளி பேட்டிங் தரவரிசையில் 904 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒரே ஒரு புள்ளி குறைவாகப் பெற்ற கோலி 2-ம் இடத்தில் உள்ளார். ரஹானே 11-வது இடத்திலிருந்து முன்னேறி 7-ம் இடம் பிடித்துள்ளார். 

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். 2-வது டெஸ்டில் அற்புதமாகப் பந்துவீசியதால் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

அணிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

ஐசிசி தரவரிசை: பேட்டிங்

1. ஸ்மித்
2. விராட் கோலி
3. கேன் வில்லியம்சன்
4. புஜாரா
5. ஹென்றி நிகோல்ஸ்

ஐசிசி தரவரிசை: பந்துவீச்சு

1. கம்மின்ஸ்
2. ரபாடா
3. பும்ரா
4. ஹோல்டர்
5. ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஐசிசி தரவரிசை: அணிகள்

1. இந்தியா
2. நியூஸிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. இங்கிலாந்து
5. ஆஸ்திரேலியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com