Enable Javscript for better performance
மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்த செப். 28 வரை அவகாசம்: பிசிசிஐ சிஓஏ- Dinamani

சுடச்சுட

    

    மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்த செப். 28 வரை அவகாசம்: பிசிசிஐ சிஓஏ

    By DIN  |   Published on : 07th September 2019 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை 14-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ சிஓஏ.
    நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படியும், உச்சநீதிமன்றம் அனுமதித்த புதிய சட்டவரையறையின்படியும், பிசிசிஐக்கு வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும்.
    இந்நிலையில் சிஓஏ தலைவர் வினோத் ராய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தல் பிரச்னை குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், செப்.14-ஆம் தேதியை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். அதற்கு மேல் கண்டிப்பாக அவகாசம் தரப்படாது. அக்டோபர் 22-ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் அதற்கு 21 நாள்கள் முன்னதாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் வேண்டும்.
    தேசிய தேர்தலில் பங்கேற்க மாநில சங்கங்கள் தங்கள் பிரதிநிதிகள் பெயர்களை 28-ஆம் தேதிக்குள் பிசிசிஐக்கு தெரிவிக்க வேண்டும்.  அக். 22-ஆம் தேதி தேர்தலில் எந்த மாறுதலும் இல்லை. 
    புதிய வரையறைக்கு ஒப்புதல் தெரிவிக்கும் கடிதம், தேர்தல் அதிகாரி நியமனம், தேர்தல் நடத்த அறிவிப்பு, போன்ற நடைமுறைகளை 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai