ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் சாதிப்பர்: கிரண் ரிஜிஜு

இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களின் திறமை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.


இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களின் திறமை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரியோடி ஜெனிரோவில் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியினர் 5 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இதற்கிடையே நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகள், புது தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது: உலகக் கோப்பை போட்டியில் நமது வீரர்கள் குவித்த வெற்றிகள் சிறப்பானது. ஒட்டுமொத்த அணியையும் இதற்காக பாராட்டுகிறேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் துப்பாக்கி சுடுதலில் அதிகம் பேர் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர். ஏற்கெனவே 9 பேர் தகுதி பெற்றுள்ளனர். மேலும்  3 பேர் தகுதி பெற இயலும்.
உலகிலேயே தலைசிறந்த அணியாக உள்ள நமது வீரர், வீராங்கனைகளின் திறமை ஒலிம்பிக் போட்டியில் வெற்றியாக எதிரொலிக்கும். ஒலிம்பிக்கிலும் அதிக பதக்கங்களை துப்பாக்கி சுடுதலில் பெறுவோம்.
காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி பிரச்னை: மேலும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து பிரிட்டனுக்கு தெரிவித்துள்ளோம். காமன்வெல்த்தில் இந்தியா முக்கியமான அங்கம். காமன்வெல்த் அமைப்பு குழு இந்த முடிவை எடுத்தது. அதில் நமது கருத்தை கூற உறுப்பினர்கள் இல்லை. இது விளையாட்டு நிகழ்வாக உள்ளதால், உரிய வழிகளில் ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளோம்.  ஓஏ விரைவில் மீண்டும் இதுதொடர்பாக ஆலோசிக்கும்.
இந்தியாவின் ஊக்க மருந்து தடுப்பு ஆய்வகத்தை 6 மாதங்களுக்கு வாடா தடை செய்துள்ளது கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வகத்தின் தலைவர் என்ற முறையில் சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டன. ஆனால் வாடா தற்போது நமது ஆய்வகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. வாடாவின் நடவடிக்கையை எதிர்த்து முறையிடுவோம்.
புதுதில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் மையத்தில் உள்ள குறைகளை விரைவில் நிவர்த்தி செய்வோம் என்றார் ரிஜிஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com