சுடச்சுட

    

    முருகப்பா ஹாக்கி: இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி மோதல்

    By DIN  |   Published on : 08th September 2019 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    HOCKEY

    93-ஆவது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்ககக் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் முன்னேறியுள்ளன.
     போட்டியின் 9-ஆவது நாளான சனிக்கிழமை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டத்தில் ஐஓசி 6-3 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
     மத்திய செயலகம் தரப்பில் தரம்பீர் யாதவ், கோவிந்த் சிங், சாஹிர் முகமது கோலடித்தனர்.
     இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கடற்படையை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் நேஷனல் வங்கி.
     கடற்படை தரப்பில் ஜுக்ராஜ் சிங்கும், பஞ்சாப் வங்கி தரப்பில் மந்தீப் மோர், குர்ஜிந்தர் சிங், அபிஷேக், சுக்ஜித் சிங் ஆகியோர் கோலடித்தனர்.
     ஐஓசி-பஞ்சாப் நேஷனல் வங்கி இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai