துளிகள்...

மங்கோலிய தலைநகர் உலன்பட்டாரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் சீனாவின் யுனையு சென்னிடம் 11-13, 6-11, 8-11, 5-11 என்ற கேம் கணக்கில் தோல்வியுற்று

* மங்கோலிய தலைநகர் உலன்பட்டாரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் சீனாவின் யுனையு சென்னிடம் 11-13, 6-11, 8-11, 5-11 என்ற கேம் கணக்கில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பயாஸ் ஜெயின். இப்போட்டியில் இந்தியா 2 வெள்ளியை வென்றது.
* வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள சுல்தான் ஜோஹோர் கோப்பைக்கான ஹாக்கி போட்டிக்கு தயாராகும் வகையில் 33 வீரர்கள் பங்கேற்கும் இந்திய ஜூனியர் அணி பயிற்சி முகாம், பெங்களூருவில் வரும் திங்கள்கிழமை தொடங்கி அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூஸிலாந்து, ஜப்பான் அணிகள் பங்கேற்கின்றன.
* பிகார் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை மேற்கொள்ளவும், புதிய நிர்வாகிகள் தேர்தலை கண்காணிக்கவும் சுயேச்சையான 3 நபர் குழுவை பிசிசிஐ சிஓஏ நியமித்துள்ளது. வெளிப்படையான நேர்மையான முறையில் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் சிஓஏ தெரிவித்துள்ளது.
* யுஎஸ் ஓபன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ள கனடா இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு எதிர்காலத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்வார் என ஜாம்பவான் செரீனாவின் பயிற்சியாளர் பேட்ரிக் மொர்டோலு கணித்துள்ளார்.
* பார்சிலோனா அணியை விட்டு சீசன் முடிவதற்குள் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விலகலாம் என கிளப் தலைவர் ஜோசப் மரியா கூறியுள்ளார். கடந்த 2017 முதல் 4 ஆண்டுக் காலத்துக்கு புதிய ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திட்டுள்ளார். 2021 ஆண்டு முழுவதும் மெஸ்ஸி ஆட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனினும் அவரே இதுகுறித்து முடிவு செய்யலாம் என்றார்.
* பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர் மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பஜ்வா, அதிபர் ஆரிப் ஆல்வி, கேப்டன் சர்ப்ராஸ் அகமது, வாஸிம் அக்ரம், மியான்டட், மொயின் கான், ரஷீத் லத்தீப், உள்பட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com