சுடச்சுட

  

  ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20: வித்யா மந்திர் சாம்பியன்

  By DIN  |   Published on : 09th September 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  பள்ளிகள் இடையிலான சென்னை பிரிவு ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 போட்டியில் சென்னை மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  சென்னை சூப்பர் கிங்ஸ், முத்தூட் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் ஜேஎஸ்கே டி20 போட்டி நடத்தப்பட்டது. சென்னை பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டம் முடிந்த நிலையில், வித்யாமந்திர்-லேடி ஆண்டாள் பள்ளிகள் இடையே இறுதி ஆட்டம் சென்னை குருநானக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  முதலில் ஆடிய வித்யா மந்திர் அணி 20 ஓவர்களில் 166/5 ரன்களை குவித்தது. (ராகுல் ஐயப்பன் 46, விஜய் பிரியதர்ஷன் 66) மாதவன் 2-21.
  பின்னர் ஆடிய லேடி ஆண்டாள் 12.5 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. (அனிருத் சேஷாத்திரி 27), சிவி அச்சியூத் 4-14.
  போட்டி நாயகனாக எல்.ராம்நாத், சிறந்த வீரராக விஜய் பிரியதர்ஷன் (வித்யா மந்திர்), பேட்ஸ்மேனாக விஷ்ணு பிரேம்குமார் (லேடி ஆண்டாள்), பவுலராக சிவி. அச்சியூத் (வித்யா மந்திர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  சிஎஸ்கே உதவி பயிற்சியாளர் ராஜீவ் குமார், முத்தூட் பிராந்திய மேலாளர் அருண், இந்திய சிமெண்ட்ஸ் முதுநிலை பொதுமேலாளர் சங்கரன் உன்னி, பங்கேற்று பரிசளித்தனர்.
  மேலும் வித்யாமந்திர், லேடி ஆண்டாள் பள்ளிகள், திருநெல்வேலியில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றந.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai