துளிகள்...

வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, குஜராத் மாநிலம் சர்தார் பட்டேல் சிலை அமைந்துள்ள கேவாடியாவில் நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண்

வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, குஜராத் மாநிலம் சர்தார் பட்டேல் சிலை அமைந்துள்ள கேவாடியாவில் நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. 

ரஷியாவின் எக்டரின்பர்க் நகரில் திங்கள்கிழமை உலக குத்துச்சண்டை போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய ஆடவர் அணி உள்ளது. 

ஐசிசி, ஏசிசி கூட்டங்களில் ஏன் கலந்து கொள்ளவில்லை என விளக்கம் கேட்டு பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளதரிக்கு கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிசிசிஐ ஒப்பந்த விதிகளை மீறி கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டி விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

இந்திய முன்னாள் கேப்டன் தோனிக்கு கெளரவமான பிரிவுபசாரம் அளிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் அனில்கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com