சுடச்சுட

  
  telugu-mumba

  கொல்கத்தாவில் நடைபெற்ற புரோ கபடி ஆட்டம் ஒன்றில் மோதிய யு மும்பாதெலுகு டைட்டன்ஸ் அணி வீரர்கள்.


  புரோ கபடி லீக் 7ஆவது சீசன் இறுதி ஆட்டம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆமதாபாதில் நடைபெறும் என அமைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
  பிளே ஆஃப், இரண்டு எலிமினேட்டர்கள், அரையிறுதி ஆட்டங்கள், இறுதி ஆட்டம் அனைத்தும் ஆமதாபாதிலேயே நடைபெறும்.  அக்டோபர் 14இல் இரண்டு எலிமினேட்டர்கள் ஆட்டமும், 16ஆம் தேதி இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும். 19ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
  மொத்தம் 12 அணிகளில் 59 புள்ளிகளுடன் தபாங் தில்லி அணி முதலிடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
  யு மும்பா வெற்றி: கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பிகேஎல் ஆட்டம் ஒன்றில் யு மும்பா அணி 4127 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. ராகேஷ் கெளடா சிறந்த ரைடராகவும், விஷால் பரத்வாஜ் சிறந்த டிபன்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai