சுடச்சுட

    

    உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: ஆசிய சாம்பியனை டிரா செய்தது இந்தியா

    By DIN  |   Published on : 11th September 2019 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    india


    உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாரை 0-0 என டிரா செய்தது இந்தியா.
    பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் 2022-இல் கத்தாரில் நடைபெறவுள்ளன. இதற்காக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் போராடி தோற்றது.
    இதன் தொடர்ச்சியாக டோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  2-ஆவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆசிய சாம்பியன் கத்தாருடன் மோதியது இந்தியா.  வலுவான தற்காப்பு ஆட்டத்தால், கத்தாரின் கோலடிக்கும் முயற்சிகளை முறியடித்தனர். கேப்டனாக செயல்பட்ட குர்ப்ரீத் சிங் சாந்து அற்புதமாக செயல்பட்டு எதிரணியின் கோல் வாய்ப்புகளை முறியடித்தார். அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai