சுடச்சுட

  
  netherland-win


  யூரோ 2020 தகுதிச் சுற்றில் பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்டவை தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
  பெல்ஜியம் 40 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தையும், நெதர்லாந்து 40 என எஸ்டோனியாவையும் வீழ்த்தின. ரோமேலு லுகாகு, ராபர்ட்டோ மார்டினஸ், தாமஸ், டோபி ஆகியோர் கோல்கள் அடித்தனர். பெல்ஜியம் கேப்டன் கெவின் டி புருயன் நான்காவது கோலை அடித்து வெற்றியை நிறைவு செய்தார்.
  நெதர்லாந்து ஏற்கெனவே பலம் வாய்ந்த ஜெர்மனியை 42 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக டளினில் 40 என எஸ்டோனியாவை வீழ்த்தியது.
  மற்றொரு ஆட்டத்தில் குரோஷியாஅஜர்பைஜான் மோதிய ஆட்டம் 11 என டிராவில் முடிந்தது. ஹங்கேரி 21 என்ற கோல் கணக்கில் ஸ்லோவோக்கியாவை வென்றது. ஸ்லோவேனியா 32 என இஸ்ரேலை வீழ்த்தியது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai