உலக தடகள சாம்பியன் போட்டி இந்திய மகளிர் தொடர் ஓட்ட அணியில் ஹிமா தாஸ்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 25 பேர் கொண்ட இந்திய அணியில் 4400 மீ. மகளிர் தொடர் ஓட்டத்தில் ஜூனியர் சாம்பியன் ஹிமா தாஸ் இடம்
உலக தடகள சாம்பியன் போட்டி இந்திய மகளிர் தொடர் ஓட்ட அணியில் ஹிமா தாஸ்


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 25 பேர் கொண்ட இந்திய அணியில் 4400 மீ. மகளிர் தொடர் ஓட்டத்தில் ஜூனியர் சாம்பியன் ஹிமா தாஸ் இடம் பெற்றுள்ளார்.
கத்தார் நாட்டின் டோஹாவில் உலக தடகள சாம்பியன் போட்டி வரும் 27ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய தடகள சம்மேளனம் ஏஎப்ஐ தேர்வுக் குழுக் கூட்டத்தில் முதல் கட்டமாக பட்டியல் வெளியிடப்பட்டது. தனது விருப்ப ஓட்டமான 400 மீஇல் தேர்வு பெற முடியாத ஹிமா தாஸ், மகளிர்  4400, கலப்பு 4400 மீ, தொடர் ஓட்டத்தில் இடம் பெற்றுள்ளார். கலப்பு தொடர் ஓட்ட அணி பதக்கம் வெல்லக்கூடும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
முழங்கை காயத்தால் சிகிக்சை பெற்று வரும் நட்சத்திர ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயர் இடம் பெறவில்லை. அவரது சேர்க்கை தொடர்பாக பின்னர் ஆலோசிக்கப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவரை கவனம் செலுத்த செய்ய ஏஎப்ஐ வலியுறுத்தும் எனத் தெரிகிறது.
மேலும் சர்வதேச தடகள சம்மேளனம் ஏஏஎப்ஐ அனுமதித்தால் தூத்தி சந்த் 100 மீ, அர்ச்சனா சுசீந்திரன் 200 மீ, தேஜஸ்வின் சங்கர் உயரம்  தாண்டுதல் ஆகியோர் பெயர்களுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உலகப் போட்டியில் பங்கேற்க ஏதுவாக தேஜஸ்வின் இந்தியாவுக்கு வந்து தகுதிச் சுற்றில் பங்கேற்குமாறு கூறப்பட்டுள்ளது.
400 மீ. ஓட்டத்தில் அஞ்சலி தேவியின் பெயரை சேர்க்க தனியாக தேர்வு சுற்று நடத்தவும் ஏஎப்ஐ முடிவு செய்தது. 
தேர்வுக் குழுத் தலைவர் குர்பச்சன் சிங், ஏஎப்ஐ தலைவர் அதில் சுமரிவாலா, தலைமைப் பயிற்சியாளர் பகதூர் சிங், சாஹு, கிருஷ்ணா புனியா, பிரவீண் ஜாலி, உதய் பிரவு, பரம்ஜித் சிங் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com