தென்னாப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப் பயண அட்டவணை

தென்னாப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப் பயண அட்டவணை


தென்னாப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணி, தற்போது மே.இ.தீவுகளில் நடைபெற்ற மூன்று ஆட்ட தொடர்களிலும் அமோக வெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க தொடர்: இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெறவுள்ள 3 டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் தொடரில் பங்கேற்று தென்னாப்பிரிக்க ணி விளையாட உள்ளது. வரும் 15ஆம் தேதி தர்மசாலாவில் முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது. 
விராட் கோலியின் அணி, மே.இ.தீவுகளில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி உற்சாகத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஒருநாள் உலகக் கோப்பையில் மோசமான தோல்வியோடு வெளியேறிய தென்னாப்பிரிக்க அதில் இருந்து இன்னும் மீளவில்லை.
டி காக் புதிய கேப்டன்: குயிண்டன் டி காக்கை புதிய கேப்டனாக நியமித்து, மூத்த வீரர் டூபிளெஸ்ஸிஸை அணியில் நீக்கி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் எழுச்சி பெறும் உத்வேகத்துடன் உள்ளது அந்த அணி.  3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் முடிவுற்றதும், டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் மோதுகின்றன.
3 டெஸ்ட் ஆட்டங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்கிறது. இந்த சாம்பியன்ஷிப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 
டி20 தொடர் விவரம்: முதல் டி20: செப். 15, தர்மசாலா, இரண்டாவது டி20: செப். 18, மொஹாலி, மூன்றாம் டி20: செப். 22, பெங்களூரு. டி20 ஆட்டங்கள் இரவு 7 மணிக்கு தொடங்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: முதல் டெஸ்ட், அக். 26, விசாகப்பட்டினம், இரண்டாவது டெஸ்ட், அக். 1014, புணே, மூன்றாவது 
டெஸ்ட், அக். 1923, ராஞ்சி. டெஸ்ட் ஆட்டங்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com