சுடச்சுட

  

  கத்தாருடன் ஆட்டத்தை டிரா செய்தது பெருமையாக உள்ளது: சுனில் சேத்ரி 

  By DIN  |   Published on : 12th September 2019 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sunil-chetri


  உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் கத்தாருடன் ஆட்டத்தை டிரா செய்தது பெருமையாக உள்ளது என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பயிற்சியாளருக்குதான் இந்தப் பெருமை சேரும். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
  அவர், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்
  குரூப்-இ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, கத்தார் ஆகிய அணிகள் தோஹாவில் செவ்வாய்க்கிழமை மோதின. ஆட்ட நேர முடிவில் கோல்கள் எதுவுமின்றி ஆட்டம் டிரா ஆனது. இதனால், இந்திய அணி ஒரு புள்ளியைப் பெற்றது.
  கத்தார் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai