சுடச்சுட

  

  கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸில் இடம் பெறுவேன்: விஸ்வநாதன் ஆனந்த்

  By DIN  |   Published on : 12th September 2019 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  viswanathan-anand


  லண்டனில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ள கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ் போட்டியில் தான் நிச்சயம் பங்கேற்பேன் எனறு 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
  லண்டனில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க அவருக்கு இன்னும் 13 புள்ளிகள் தேவைப்படுகின்றன.
  இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
  நவம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ருமேனியாவின் புசாரெஸ்ட் நகரில் நடைபெறவுள்ள செஸ் போட்டியிலும், அதே மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள டாடா ஸ்டீல் ராபிட் அன்ட் பிலிட்ஸ் செஸ் போட்டியிலும் பங்கேற்கிறேன்.
  இப்போட்டிகளில் வெற்றி பெற்று லண்டனில் நடைபெறவுள்ள போட்டியில் நிச்சயம் இடம் பெறுவேன். கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ள டாடா ஸ்டீல் ராபிட் மற்றும் பிலிட்ஸ் போட்டியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். கொல்கத்தா தேசிய நூலகத்தில் இப்போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்றார் அவர்.
  நார்வே செஸ் வீரரும், தற்போதைய உலக செஸ் சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள போட்டியில் எதிர்கொள்கிறார் ஆனந்த்.
  இதுகுறித்து அவர் கூறுகையில், கார்ல்சனுடன் பல முறை விளையாடியிருக்கிறேன். அவருடன் விளையாடுவது சவால் நிறைந்த ஒன்றாகும். 
  இந்த ஆண்டு அவருடைய ஆட்டத் திறன் மிகச் சிறப்பாக உள்ளது என்றார். கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தை கார்ல்சன் வீழ்த்தினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai