சுடச்சுட

  
  rohith


  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில், கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோஹித்துக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
  அணியின் இடம்பெறும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க தில்லியில் வியாழக்கிழமை தேர்வுக் குழு கூடி ஆலோசிக்கவுள்ளது.
  மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சேர்க்கப்படவில்லை.
  அந்தத் தொடரில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால் ரோஹித்துக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் ரோஹித் கடைசியாக பங்கேற்ற டெஸ்ட் போட்டியாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai