சுடச்சுட

  


  தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய ஏ அணி.
  இரு அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. 
  தென்னாப்பிரிக்க ஏ முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கோ ஜேன்சேன் 45, டேன் பெய்டட் 33 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் சர்துல் தாகுர், கிருஷ்ணப்ப கெளதம் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
  இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஷுப்மன் கில் 90, ஜலாஜ் சக்úஸனா 61 ரன்களை விளாசினர்.  லுங்கி கிடி, டேன் பெய்டட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
  இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 186 ரன்களுக்கு சுருண்டது. ஹென்ரிச் கிளாஸன் 48, வியான் முல்டர் 46, ஹம்சா 44 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் ஷபாஸ் நதீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  வெற்றிக்கு 48 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை வியாழக்கிழமை தொடர்ந்தது. ஷுப்மன் கில் 5, அங்கித் பானே 6, பரத் 5  ரன்களுக்கு வெளியேறிய நிலையில், ரிக்கி பூய் 20, சிவம் துபே 12 அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 9.4 ஓவர்களில் 49/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா,

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai