சுடச்சுட

  
  asus


  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 5-ஆவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
  ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்க வைத்துக் கொண்ட நிலையில், கடைசி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
  டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து தரப்பில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 47, கேப்டன் ஜோ ரூட் 57 ஆகியோர் மட்டுமே நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். ஜோ டென்லி 14, பென் ஸ்டோக்ஸ் 20, ஜோனி பேர்ஸ்டோ 22, ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.
  ஜோஸ் பட்லர் 64: சாம் கர்ரன் 15, கிறிஸ் வோக்ஸ் 2, ஆர்ச்சர் 9 ரன்களுக்கு அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 3 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 64 ரன்களுடனும், ஜேக் லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
  ஆட்டநேர முடிவில் 82 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து.
  மிச்செல் மார்ஷ் அபாரம்: அபாரமாக பந்துவீசிய மிச்செல் மார்ஷ் 4-35, பேட் கம்மின்ஸ் 2-73, ஹேஸல்வுட் 2-76 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai