சுடச்சுட

  

  உலக ஆடவர் குத்துச்சண்டை போட்டி: மணிஷ் கெளஷிக் அபாரம்

  By DIN  |   Published on : 13th September 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  india-manish-boxing

  எதிராளிக்கு குத்து விடும் இந்திய வீரர் மணிஷ் கெளஷிக்.


  உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மணிஷ் கெளஷிக் அபார வெற்றி பெற்று 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
  ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 63 கிலோ பிரிவில் காமன்வெல்த் வெள்ளி வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கிர்கிஸ்தான் வீரர் உலு அர்ஜெனை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் நெதர்லாந்தின் என்ரிகோ லாக்ரஸுடன் மோதுகிறார் மணிஷ்.
  தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த மணிஷ், எதிராளி வீரர் உலுவிட்ட குத்துகளில் இருந்து லாவகமாக தப்பித்தார். ஏற்கெனவே பிரிஜேஷ் யாதவ் 81 கிலோ பிரிவில் வென்றுள்ளார்.
  ஆசிய சாம்பியன் அமித் பங்கால், கவிந்தர் பிஷ்ட், ஆஷிஷ்குமார் ஆகியோருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai