சுடச்சுட

  
  jaipur-patna-pkl

  பாட்னா வீரரை மடக்க முயலும் ஜெய்ப்பூர் வீரர்கள்.


  புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை 36-33 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது பாட்னா பைரேட்ஸ்.
  கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாட்னாவின் அபார ஆட்டத்துக்கு ஜெய்ப்பூர் அணியும் ஈடுகொடுத்து ஆடியது. ஆனால் பாட்னா தரப்பில் நட்சத்திர வீரர்கள் பார்திப் நர்வால், நீரஜ் குமார், ஜங் குன் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
  முதல் பாதி ஆட்ட முடிவில் ஜெய்ப்பூர் 15-14 என முன்னிலை பெற்றிருந்தது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்த நிலையில், இறுதிக் கட்டத்தில் நீரஜ்குமார், ஜங்குன் ஆகியோர் அபாரமாக ஆடி பாட்னாவை வெற்றி பெற வைத்தனர். சிறந்த ரைடராக சுஷில் குலியாவும், டிபன்டராக சந்தீப் துலும் தேர்வு பெற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai