சுடச்சுட

  

  டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பிரபல பாகிஸ்தான் வீரர் தற்காலிக ஓய்வு!

  By எழில்  |   Published on : 13th September 2019 03:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  wahab_riaz1

   

  ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ். 

  சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் கடந்த இரு வருடங்களாக நான் விளையாடிய விதம் குறித்து ஆராய்ந்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். முதல் தர கிரிக்கெட் போட்டியிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுகிறேன். இந்தக் காலகட்டத்தில் நான் ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் கவனம் செலுத்துவேன். இதன்மூலமாக டெஸ்ட் போட்டிக்கான உடற்தகுதி குறித்த முடிவையும் எடுப்பேன். எப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று, சிறப்பாக விளையாட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறதோ அப்போது மீண்டும் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவேன் என்று வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.

  வஹாப் ரியாஸ், 27 டெஸ்டுகள், 87 ஒருநாள், 27 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2018 முதல் 5 டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே 34 வயது வஹாப் பங்கேற்றுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் கடந்த இரு வருடங்களாக விளையாடாதவர், சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகி, மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai