குண்டுவெடிப்புக்கிடையே சாதித்த ரஷீத் கான்

கடுமையான உள்நாட்டுப் போர் பாதிப்புக்கு இடையிலும் சத்தமின்றி பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறார்   ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் ரஷீத் கான்.
குண்டுவெடிப்புக்கிடையே சாதித்த ரஷீத் கான்


கடுமையான உள்நாட்டுப் போர் பாதிப்புக்கு இடையிலும் சத்தமின்றி பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறார்   ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் ரஷீத் கான்.
பாரம்பரிய விளையாட்டான கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே, போன்றவை புகழ் பெற்று விளங்குகின்றன. புதிதாக வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவை புதிதாக ஐசிசி சார்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வங்கதேசம் டி20, ஒருநாள் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வருகிறது. 
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் டி20 ஆட்டத்தில் அபாரமாக ஆடி வருகிறது. ஒரு நாள் டெஸ்ட் ஆட்டங்களில் வலிமையாக இல்லை. கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையிலும் இடம் பெற்று ஆடியது ஆப்கானிஸ்தான். அதில் இந்தியா, பாகிஸ்தானுக்கு தோல்வி அச்சத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2020 டி 20 உலகக் கோப்பைக்கு அந்நாடு தயாராகி வருகிறது.
டெஸ்ட் ஆட்டத்திலும் வலிமையாக உருவெடுக்கும் வகையில் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 20 வயது இளம் வீரரான ரஷீத் கான், ஆப்கானிஸ்தானின் பதற்றம் நிறைந்த நங்கார்ஹரில் பிறந்தவர்.
ஆப்கானிஸ்தான் கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் சீரழிந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் டேராடூன் மைதானத்தை சொந்த மைதானமாகக் கொண்டு ஆப்கன் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய சாதனைகள்
அறிமுக ஆட்டத்திலேயே இளம் கேப்டனாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் அறிமுக டெஸ்டிலேயே 11 விக்கெட்டுகள், அரைசதம் நிகழ்த்திய முதல் வீரர் சாதனை. ஓரே ஆட்டத்தில் 2 முறை 5 விக்கெட்டுகள், 50 ரன்களுக்கு மேல் விளாசிய நான்காவது வீரர்.இதற்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் ஷெல்டன் ஜாக்சன், 1905, இம்ரான் கான் 1982, ஷகிப் அல்ஹசன் 2009, போன்றோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.  

டெஸ்ட்டில் அறிமுகம்
கடந்த 2018-இல் இந்தியாவுடன் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமானார். ரஷீத். 3 ஆட்டங்களில் மொத்தம் 104 ரன்களையும், 20 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

ரஷீத் கான் அதிரடி ஆட்டம்
கேப்டனான ரஷீத் கான் இதில் 2 இன்னிங்ஸ்களிலும் 11-104 விக்கெட்டுகளை வீழ்த்தியும், ஒரு அரைசதத்தையும் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்ட் ஆட்டத்திலேயே அபார வெற்றியை பெற்றுள்ளார் ரஷீத் கான்.

அற்புதமான வெற்றி
வங்கதேசத்துக்கு எதிராக சிட்டகாங்கில் அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். கடந்த ஆண்டு தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கன் 3-ஆவது ஆட்டத்திலேயே அதிரடி வெற்றி கண்டது.

டி20 தரவரிசையில் முதலிடம்
லெக் பிரேக் பவுலரான ரஷீத் எதிரணிபேட்ஸ்மேன்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார். கடந்த 2015-இல் டி20, ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமான ரஷீத் கான், டி20-யில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 67 ஒருநாள் ஆட்டங்களில் 903 ரன்களையும், 131 விக்கெட்டுகளையும், டி20-யில் 38 ஆட்டங்களில் 123 ரன்களையும், 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com