அடுத்த வருடம், சிஎஸ்கே அணியில் விளையாடத் தயாராக இரு என்றார் தோனி: தீபக் சஹார்

ஐபிஎல் 2017 இறுதிச்சுற்றில், மும்பையிடம் புணே அணி தோற்ற பிறகு, நான் தோனியிடம் சென்று அறிவுரை கேட்டேன்...
அடுத்த வருடம், சிஎஸ்கே அணியில் விளையாடத் தயாராக இரு என்றார் தோனி: தீபக் சஹார்

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. முழு உற்சாகத்துடன் காணப்படும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் பேட்டியளித்ததாவது:

புணே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது என்னுடைய பேட்டிங் தோனியை ஈர்த்தது. அதன்பிறகு பந்துவீசுவதைப் பார்த்து அவருக்கு என்னை மேலும் பிடித்துப்போனது. அணியின் கேப்டனாக இருந்ததால் என்னை விளையாட வைக்கவேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் காயங்கள் காரணமாக என்னால் விளையாடமுடியாமல் போனது. அடுத்த வருடம் புணே அணியின் கேப்டனாக ஸ்மித் இருந்தார். அவர் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். எனவே எனக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஐபிஎல் 2017 இறுதிச்சுற்றில், மும்பையிடம் புணே அணி தோற்ற பிறகு, நான் தோனியிடம் சென்று அறிவுரை கேட்டேன், நான் எவ்வாறு என்னை மேம்படுத்துவது என. அதற்கு அவர் சொன்னார் - அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தயாராக இரு என்றார். 2018, 2019 ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகுதான் எல்லோரும் என்னைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முக்கியமான இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடவில்லை. இதனால் எனக்கு அழுத்தம் ஏற்படவில்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது வேகப்பந்துவீச்சுக்குத் தலைமை வகித்தேன். பவர்பிளேயில் அதிக ஓவர்கள் வீசினேன். எனவே என்னால் நன்றாக விளையாட முடியும் என நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com