இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது (விடியோ இணைப்பு)

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்


இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 ஆட்டம் தரம்சாலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்தது. ஆனால், அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, அங்கு மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால் டாஸ் போடுவதிலேயே தொடர்ந்து தாமதம் நீடித்து வந்தது. 

இதையடுத்து, மழை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். எனவே இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் ஆட்டம் கைவிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் மொகாலியில் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com