இந்திய கிரிக்கெட்டின் மீது அக்கறை உள்ளவர் தோனி

இந்திய கிரிக்கெட்டின் மீது அக்கறை கொண்டவர் தோனி. இந்த விவகாரத்தில் அவர் எங்களுடனே உள்ளார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் மீது அக்கறை உள்ளவர் தோனி

இந்திய கிரிக்கெட்டின் மீது அக்கறை கொண்டவர் தோனி. இந்த விவகாரத்தில் அவர் எங்களுடனே உள்ளார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதற்காக 2 அணிகளும் சனிக்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.
அப்போது கேப்டன் கோலி கூறியதாவது:
தோனியின் எதிர்காலம் குறித்து கேட்ட போது கோலி கூறுகையில், அவருக்கு இந்திய கிரிக்கெட்டின் மீது அக்கறை உள்ளது. இதில் அணி நிர்வாகத்தைப் போலவே நோக்கம் கொண்டவர். ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களை உருவாக்கினாலும், 38 வயதான தோனி எப்போதும் விலை மதிப்பற்றவர்.
தோனி ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுப் பெறாததது. தோனி தனது விமர்சர்களுக்கு ஆட்டம் மூலமே சரியான பதிலடி தருபவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விளையாட்டில் அனுபவம் எப்போதும் முக்கிய பங்கை வகிக்கும். பலமுறை மைதானத்தில் தோனி இதை நிரூபித்துள்ளார். அவர் தொடர்ந்து ஆடும் பட்சத்தில் அணிக்கு விலைமதிப்பற்றவர். ஓய்வு பெறும் முடிவென்பது தனிப்பட்ட விஷயம் ஆகும். 
குல்தீப், சஹல் நீக்கம்: குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல் ஆகியோர் டி20 தொடரில் சேர்க்கப்படாததற்கு காரணம், அவர்களது பேட்டிங் செயல்பாடு தான். இதனால் தான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு தரப்பட்டது.
சரியான விகிதத்தில் அணி அமைய வேண்டும் என்பதை கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து அணிகளிலும் 9, 10-ஆம் நிலை வரை பேட்டிங் செய்யும் போது, நாமும் ஏன் அவ்வாறு ஆடக்கூடாது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அஸ்வின், ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப், சஹல் சேர்க்கப்பட்ட போது, பலர் விமர்சித்தனர். எந்த முடிவெடுத்தாலும், பலமான சரியான அணி அமைய வேண்டும் என்பதே நோக்கமாகும். அடுத்து வரும் டி20 உலகக் கோப்பை ஒரு மைல்கல் போன்றதாகும். ஒவ்வொரு அணியும் இதற்காக தீவிரமாக தயாராவர். அதே போல் நாமும் அணியை உருவாக்குவோம்.
இதுபோன்ற தொடர்களில் வீரர்களின் இணைகளை சோதித்து பார்க்க முடியும். அவர்களது ஆடும் திறன், தகுதி, சர்வதேச அளவில் போட்டி மனப்பான்மை போன்றவை ஆய்வு செய்யப்படும். பல புதுமுகங்களுடன் ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் கோலி.

இன்றைய டி20 ஆட்டம்

தென்னாப்பிரிக்கா-இந்தியா
இடம்: தர்மசாலா
நேரம்: இரவு 7.00
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com