விஜய் ஹஸாரே கோப்பை போட்டி: தமிழக, புதுவை அணிகள் அறிவிப்பு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணியை டிஎன்சிஏ அறிவித்துள்ளது.
விஜய் ஹஸாரே கோப்பை போட்டி: தமிழக, புதுவை அணிகள் அறிவிப்பு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணியை டிஎன்சிஏ அறிவித்துள்ளது.
இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாகவும், விஜய் சங்கர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய் ஹஸாரே போட்டி ஜெய்ப்பூரில் வரும் 24 முதல் அக். 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் முன்னணி வீரர்களான முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர், அபிநவ் முகுந்த் உள்ளிட்டோரும் முக்கியமானவர்கள்.
அணி விவரம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), அபிநவ் முகுந்த், எம்.விஜய், எம்.அபராஜித், எம்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், என்.ஜெகதீசன், டி.நடராஜன், கே.விக்னேஷ், முகமது, எம்.சித்தார்த், அபிஷேக் தன்வர், ஹரி நிஷாந்த், கெளஷிக்.
எலைட் சி பிரிவில் தமிழகத்துடன், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பிகார், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, சர்வீஸஸ், மத்தியபிரதேசம், குஜராத் அணிகள் இடம் பெற்றுள்ளன.
அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கலந்ததாக தமிழக அணி உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் ஹஸாரே போட்டியில் தமிழக அணி சாதிக்கும் என பயிற்சியாளர் டி.வாசு நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி: ரோஹித் (கேப்டன்), அகமது (துணை கேப்டன்), வினய் குமார், பராஸ் டோக்ரா, அருண் கார்த்திக், கார்த்திக், ஆனந்த் சுப்பிரமணியன், விக்னேஸ்வரன், சுரேஷ்குமார், சாகர் திரிவேதி, சாந்தமூர்த்தி, ஆஷித் ராஜீவ், சாகர் உதேஷி, இக்லாஸ்நாகா, அப்துல்சபர்.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரி பொறுப்பு செயலர் சந்திரன் இதைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com