ஹரியாணா விளையாட்டுப் பல்கலை. முதல் வேந்தர் ஆனார் கபில் தேவ்

ஹரியாணா விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியாணா விளையாட்டுப் பல்கலை. முதல் வேந்தர் ஆனார் கபில் தேவ்

ஹரியாணா விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
1983-இல் முதல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ். பல்வேறு சாதனைகளுக்கு உரியவர். இந்நிலையில் ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் ராய் பகுதியில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் வேந்தராக கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி, விளையாட்டு அறிவியல், நவீன தொழில்நுட்பம், ஊட்டச்சத்து, விளையாட்டு ஊடகம், சந்தைப்படுத்துதல் போன்றவை தொடர்பான பாடங்கள் இதில் பயிற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
காந்திநகர், சென்னைக்கு பின் நாட்டில் அமைக்கப்படும் 3-ஆவது விளையாட்டுப் பல்கலைக்கழகம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com