துளிகள்..

புணேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புரோகபடி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை 34-30 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது

புணேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புரோகபடி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை 34-30 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது தபாங் தில்லி அணி. நவீன் குமார் சிறந்த ரைடராகவும், விஷால் மானே சிறந்த டிபன்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தில்லி டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற தேசிய தகுதிச் சுற்று போட்டி மகளிர் 50 மீ. ரைபிள் பிரிவில் 3 பிரிவுகளிலும் பட்டம் வென்றார் அன்ஜும் மொட்கில். ஜூனியர் ஆடவர் பிரிவில் விஜயவீர் சித்து 25 மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 2 பட்டம் வென்றார்.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் பந்தய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்ஆர்எப் 1600 இந்திய சுற்றுலா கார் பிரிவு பந்தயத்தில் ராகுல் ரங்கசாமி, துருவ் சிவாஜி ஆகியோர் பட்டம் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com