மழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20

பலத்த மழையால் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் கைவிடப்பட்டது.
பலத்த மழையால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்த தர்மசாலா கிரிக்கெட் மைதானம்.
பலத்த மழையால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்த தர்மசாலா கிரிக்கெட் மைதானம்.

பலத்த மழையால் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் கைவிடப்பட்டது.
2020 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அடுத்தடுத்து பல்வேறு தொடர்களில் ஆட உள்ளது. இதன் முதல் கட்டமாக தென்னாப்பிரிக்காவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.
இதன் முதல் ஆட்டம் தர்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்மசாலாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. மழையால் ஹிமாசலப்பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்ததால், டாஸ் போடுவது தாமதமானது.
களப் பணியாளர்கள் தொடர்ந்து மைதானத்தில் தேங்கி இருந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழை விடாததால், அப்பணியும் பாதிக்கப்பட்டது.
நடுவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் மழை பாதிப்பால் தொடர்ந்து ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது தெரிந்தது.
இதனால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரண்டாவது டி20 ஆட்டம் வரும் புதன்கிழமை மொஹாலியில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com